Karuvakaatu Karuvaaya - D. Imman

Karuvakaatu Karuvaaya

D. Imman

00:00

04:50

Similar recommendations

Lyric

கருவக்காட்டு கருவாயா

கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா

என்ன மூச்சு முட்ட விடுவாயா

கால் வளந்த மன்னவனே வா

காவலுக்கு நின்னவனே வா வா

நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு

உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு

என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா

கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா

என்ன மூச்சு முட்ட விடுவாயா

தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு

மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு

குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு

கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு

தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு

என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு

இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு

என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ

எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு

மச்சம் மட்டும் எத்தனையோ

இன்னமும் எடுக்கல கணக்கு

நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு

உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு

என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா

கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா

ஏ பாசம் உள்ள நெஞ்சில்

நான் வாசம் பண்ண போறேன்

வாரம் வரும் முன்னே

உன்ன மாசம் பண்ண போறேன்

சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்

ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்

பாலு தயிரா உறையும் முன்னே

பத்து தடவ சேந்திருப்போம்

தயிரு மோரா மாறும் மட்டும்

உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா

ஏழு சென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா

நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு

உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு

என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா

- It's already the end -