00:00
04:22
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
♪
பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூயென்குது
பூவிலூறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதை தான் பண்பாடுது
சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்
நீ நேசம் தர அதில் நான் வாசம் பெற
குத்து விளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்
♪
ரகசிய கனவு கண்ட இந்த இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது
பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம் தான் பரிமாறுது
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற
கூச்சம்தான்
நானும் மெல்ல அள்ள
நானம் உன்னை கிள்ள
குத்து விளக்காக குல மகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
உனக்கென பிறந்தேனே
உன் தோளில் என்றும் தவழ்வேனே
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்