Ethanaala - Devi Sri Prasad

Ethanaala

Devi Sri Prasad

00:00

04:31

Similar recommendations

Lyric

எதனால எதனால என்மேல அக்கற

எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற

எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னே சொல்லாம

இரவெல்லாம் தூங்காம நொடிகூட நீங்காம

துணையாக இணையாக உயிராக தாங்குற

எதனால எதனால

எதனால எதனால என்மேல அக்கற

எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற

கண்ண இமை காப்பது போல என்ன நீ காக்குறியே

மண்ண மழை நெனப்பது போல மனச நெனைக்கிறியே

என்ன நீ ஒரு முறை கூட நின்னு முகம் பாக்கலியே

உன்ன போல் உதவுற ஆளே உலகத்தில் பொறக்கலயே

சொல்ல ஒரு வார்த்தையும் தோணல

என்னையே தேடுறேன் காணல

முன்ன போல் இப்பவும் நானில்ல

மொத்தமா மாறுது வானிலை

புரியாத புதிராக உருமாறி உருகுறேன்

எதனால எதனால

எதனால எதனால என்மேல அக்கற

எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற

ஊரே உன்ன ஒதுக்குற போதும் உன்ன நான் வெறுக்கலையே

கூட நீ நடந்தா கூட எனக்கொண்ணும் உறுத்தலையே

நிழலும் கொஞ்சம் இருட்டுல புரியும் நீதான் என்ன பிரியலையே

கூட நீ இருந்தா போதும் எனக்கொரு பயமில்லையே

இப்படி எதுக்கென்ன காக்குற

எனக்கென யாரையும் தாக்குற

உசுரென என்ன நீ பாக்குற

எனக்கொண்ணு ஆனா வேர்க்குற

மரியாத கொறையாத அளவோட இருக்குற

எதனால எதனால

எதனால எதனால என்மேல அக்கற

எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற

- It's already the end -