Sivakasi Rathiyae - S.S.Kumaran

Sivakasi Rathiyae

S.S.Kumaran

00:00

03:49

Similar recommendations

Lyric

சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

முகத்துல... தெரியுற... சுருக்கத்த போலே...

அறுவது வயசில படுத்ததுறா ஆள...

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

ஒற்றையடி பாதையில சுள்ளி பொருக்க

மத்தியானம் வருவான்னு பூத்து கிடந்தேன்

ஒத்த பனை மேலே வந்த பேய பாத்து தான்

தலை தெரிக்க ஓட்டம் புடிச்சேன்

ஏ... அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டிதான்

காதல நான் சொல்ல நினைச்சேன்

அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத

எங்க போயி சொல்லி தொலைப்பேன்

அந்த பந்தகாலு பக்கத்தில பாரு

அவ அந்த கால சொக்கதங்க தேரு...

சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

பம்பு செட்டு தண்ணீயில அவ குளிக்க

தென்னை மர உச்சியில நானும் இருப்பேன்

தென்னை மட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க

கத்திக்கிட்டே பல்லு இளிப்பேன்

ஏ... கெண்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ

கருவாடா வந்து நிக்குறா

இப்ப நல்ல நேரம் பாக்கல தாம்பூலமும் மாத்தல

தாளியைத் தான் கட்டப்போறேன்

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி...

சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி...

- It's already the end -