Unn Badhil Vendi - Siddharth

Unn Badhil Vendi

Siddharth

00:00

04:23

Similar recommendations

Lyric

உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி

உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ?

உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்

வாழ்கின்ற யோகம் நானடைவேனோ?

வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய் நீ

இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்

புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ

உனக்காக நானும் கடல் தாண்டி போவேன்

மலைமேலொரு கடல் வேண்டுமா? மழைக்கொண்டு செய்வேன்

கடல் நீளம் சேர்த்து கனவள்ளிக் கோர்த்து

என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்

யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே

நிஜம் ஆக்கி வைப்பேன்

வேறாரும் எங்கும் இல்லாத பூமி

பார்க்காத வானம் நாம் வாழப் போவோம்

வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய் நீ

இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்

புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ

வருகின்ற காற்றில் புதிதான வாசம்

நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய்

எதிர்பார்த்த எல்லாம் கைவிட்டு போக

பொய் என்பதா?, மெய் என்பதா? கை நீட்டி வந்தாய்

காணல் நீரோடுதானே மீன் தேடி தானே

நான் இன்று போனேன்

குறை ஒன்றுமில்லை பிறை மீதும் கரைகள்

உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய்

வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய் நீ

விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே

வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ

- It's already the end -