Yenthen Vanin - A.R. Rahman

Yenthen Vanin

A.R. Rahman

00:00

06:08

Song Introduction

தற்போது இந்த பாடல் குறித்து தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே

காதல் வாழும் வரை வாழ்கவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே

காதல் வாழும் வரை வாழ்கவே

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

நீயும் வளர் பிறையாக நிலவே

நீயும் வளர் பிறையாக நிலவே

உயிரை தருவேன் காதல் நிலவே நிலவே

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

வென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்

வென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்

வென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்

வென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்

மின்னல் கோடி சேர்த்து வைத்து

நீ சிரித்த காட்சிகள்

யாவும் இன்று மாயமாக

யாரை கேட்க சாட்சிகள்

உன்னை எண்ணி வாழ்ந்த காலம்,

கண்கள் ரெண்டும் ஈரமாக

காதல் ஒன்றும் காயமல்ல,

காலப்போக்கில் ஆறி போக

நெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளால்

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

என்னை விட்டு போனது அமைதியன்றோ

நீயும் இல்லா நானுமே அகதியன்றோ

நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி

எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி

புல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ

கல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி

இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கென தான்

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

நீயும் வளர் பிறையாக நிலவே

உயிரை தருவேன் காதல் நிலவே நிலவே

எந்தன் வானின் காதல் நிலவே

இன்று தேய்வது எதனால் நிலவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே

காதல் வாழும் வரை வாழ்கவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே

காதல் வாழும் வரை வாழ்கவே

- It's already the end -