00:00
03:35
தீராத பெருங்காதல் உன் மீது நான் கொண்டேன்
என் அன்பே உன் கைகள் சேர
கேட்காத ஒரு பாடல் நீ பாட நான் கேட்டேன்
அன்பே நம் காதல் பேச
கொஞ்சிடும் வார்த்தையாலே அழகாகும் மனமே
பேச பேச நீளமாகும் கணமே
காஷ்மீரின் நிறம் தீ போல மாறும் ரசித்தேனே நானும் எந்தன் உயிரே
மாறாத முகம் என்னை நாள்தோறும் சூழும்
மிதந்தேனே நானும் என் உறவே
ஓ உன்னோடு சேர்ந்து
உன் தோளில் சாய்ந்து
யூகம் நூறு வாழ்வேனே நான் தானடா
உறங்காமல் கொஞ்சுகிறாய் கெஞ்ஜலாய் பேசி
நான் காணும் திசையே நீதானடா
நாம் வாழும் உலகத்தில் வேறொன்றும் வேண்டாம்
விலகாதே நீ என்றும் தூரம்
முத்தமிட்டாய் இதமாயே பித்தம் கொண்டேன் தாகமாய்
என் காதல் மேலோங்கி உருகுகிறேன்
உன் பார்வை போதும் உந்தன் சுவாசம் போதும்
என் பூமி நீ என்று உளருகிறேன்
இமைகள் வீசினாயே
இதயம் வாங்கினாயே
உன்னாலே தான் சரிந்தேனே நான்
ஒரு கோடி மின்னல் எனை தாக்குதே
உன் பார்வையாலே என் நெஞ்சின் ஓரம்
உன் பேரை என் பேரை நன் சேர்த்து கொண்டேன் அன்பே
என் வாழ்கை நீல
உன் மூச்சில் என் மூச்சை நீ சேர்த்து வைத்தாய் அன்பே நம் காதல் வாழ
கண்களை நீ ஈர்க்கும் நேரம் புதிதாகும் தினமே
சேர சேர ஆழமாகும் சுகமே
நீ வாழும் தூரம் நான் வாழ வேண்டும்
இது ஒன்று போதும் எந்தன் உலகே
நீங்காத நேசம் நீ வீசு போதும்
இமைக்கமால் காணும் என் கனவே