Uthira Uthira - D. Imman

Uthira Uthira

D. Imman

00:00

03:50

Similar recommendations

Lyric

உதிரா உதிரா

வினவல் கோடி என்னில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

உதிரா உதிரா

வினவல் கோடி என்னில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

எனை உரசிடும் மீசை கொண்டு

எறும்பியல் படித்தேன்

எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு

மதுவியல் படித்தேன்

நா ரெண்டும் பின்னிக் கொள்ள

வேதியல் படித்திடுவேன்

உதிரா உதிரா

வினவல் ஏனோ கண்ணில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

கன்னங்கரு கரு கூந்தல் போதும்

மனவியல் விளக்க

சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்

வானியல் விளக்க

உன் நெஞ்சில் ஆழம் போதும்

கடலியல் நீ படிக்க

ஒரு பரிச்சைக்கென

இவள் தவம் கிடக்க

என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீயும் கலைக்க

அங்கே பானிபட்டு போர்

இங்கு மேனிபட்டு போர்

முத்தம் இட்டு இட்டு

இட்டு என்னை நீயும் கவிழ்க்க

தேவைகள் ஆயிரம்

தேர்வுகென்ன தீவிரம்

நடந்து முடிந்த போர்கள் எல்லாம்

நமக்கு ஏனடி

விடிய விடிய போர்கள் செய்தே

சரிதம் எழுதடி

நிதிநிலை நான் கேட்க

என் ஆடை நீ நீக்க

பண மதிப்பின் ஏற்றம்

இறக்கங்கள் நீ காட்ட

அரசியலை அறிந்திடவே

உரசியல் அறிந்திடு மானே

ஒரு இரவில் மதிப்பிழந்தே

நாம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே

உதிரா உதிரா

வினவல் கோடி என்னில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

உனை உன்னை உன்னை தூரம் தள்ளி

உளவியல் படிப்பேன்

ஹ்ம்ம் இடை இடைவெளி நீக்கதானே

களவியல் படித்தேன்

காலத்தின் காலை கட்டி

களவியல் முடித்திடுவேன்

உதிரா உதிரா

ஹ்ம் ம்ஹ்ம் ஆஅ

ஹா உதிரா உதிரா

ஹ்ம் ம்ஹ்ம் ஆஅ...

- It's already the end -