Kaatril Eeram - Joshua Sridhar

Kaatril Eeram

Joshua Sridhar

00:00

04:06

Similar recommendations

Lyric

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ

கால்கள் நடனம் இட யார் சொன்னதோ

பூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?

நேற்று நாளை அது பொய்யானதோ?

இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?

மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?

இன்றென்ன இத்தனை இன்பம்? இதயக் கூட்டில் நீந்திடுதே

நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே

நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே

வாழ்க்கையை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ

கால்கள் நடனம் இட யார் சொன்னதோ

பூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?

நேற்று நாளை அது பொய்யானதோ?

இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?

மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?

ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்

உயிரோடு இருந்தாலும் வாழும் பயணம்

இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்

அருகில் உனதருகில் நான் வாழும்

நிகழ் காலம் போதும்

நிமிடம் இந்த நிமிடம்

இது உறைந்திட வேண்டும்

மௌனத்தில் சில நேரம்

மயக்கத்தில் சில நேரம்

தயக்கத்தில் சில நேரம்

இது என்னவோ புது உலகிங்கே

கண்ணருகில் சில தூரம்

கை அருகில் சில தூரம்

வழித் துணையைக் கேட்கிறதே வா வா...

ஓ நம் நெஞ்சத்தின் ஓரம் ஏன்

இங்கு இதனை ஈரமோ?

நம் கண்களில் ஓரமா

புதுக் கனவுகள் நூறும்

இது என்ன இது என்ன

இந்த நாள் தான் திருநாளா?

இதற்காக இதற்காக

காத்திருந்தோம் வெகு நாளா?

இன்றென்ன இத்தனை இன்பம்? இதயக் கூட்டில் நீந்திடுதே

நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே

நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே

வாழ்க்கையை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ

கால்கள் நடனம் இட யார் சொன்னதோ

பூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?

நேற்று நாளை அது பொய்யானதோ?

இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?

மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?

- It's already the end -