Chitraiyae Adi Chitraiyae - Hariharan

Chitraiyae Adi Chitraiyae

Hariharan

00:00

05:42

Similar recommendations

Lyric

சித்திரையே அடி சித்திரையே

என் நித்திர போயிருச்சே

ஒன் பாடாப் படுத்தும் பார்வ என்னப்

பைத்தியமாக்கிருச்சே

பத்திரமா அட பத்திரமா ஒன்

பக்கத்தில் நிக்கட்டுமா

என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன

இடுப்புல தூக்கட்டுமா

இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி

தூளியும் ஆடட்டுமா

மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே

தூக்கி வீசட்டுமா

நியாயமா இது நியாயமா

பதில் சொல்லடி செல்லம்மா

நியாயந்தான் அது நியாயந்தான்

தாலி கட்டிட வேண்டாமா

சித்திரையே அடி சித்திரையே

என் நித்திர போயிருச்சே

ஒன் பாடாப் படுத்தும் பார்வ என்னப்

பைத்தியமாக்கிருச்சே

ரெட்டஜட வயசு

கட்டிக்கட்டிப் போட்டது நியாயமா

ரெண்டு மொசக்குட்டி என்ன

உத்து உத்துப் பாக்குது நியாயமா

கண்ணுக்குள்ள ஆச

எட்டி எட்டிப் பாக்குது நியாயமா

நீ குட்டிபோட்ட பூன போல

சுத்தி சுத்தி வருவது நியாயமா

எதையோ மறைக்கிற நியாயமா

எதுக்கோ அலையிற நியாயமா

பஞ்சாப் பறக்கிற நியாயமா

நெருப்பா நெருங்குற நியாயமா

ஊத்துக்குளி வெண்ண போல

வழுக்குறியே நியாயமா

சாத்துக்குடித் தோலுரிக்க

நெனைக்கிறியே நியாயமா

நியாயமா இது நியாயமா

நான் பத்தியம் இருக்கணுமா

நியாயந்தான் அது நியாயந்தான்

நான் சத்தியம் பண்ணட்டுமா

என்னோட மனச

அள்ளி அள்ளிக் குடிப்பது நியாயமா

அட தொட்டாலே நீதான்

தள்ளித்தள்ளிப் போவது நியாயமா

பட்டுவண்ண மொகத்தத்

தொட்டுத்தொட்டுப் பார்ப்பது நியாயமா

என் கன்னத்துல மீச

கிச்சுகிச்சு மூட்டுது நியாயமா

பாடாப் படுத்துற நியாயமா

ஆளாப் பறக்கிற நியாயமா

தொட்டா சிணுங்குற நியாயமா

சிட்டாத் துடிக்கிற நியாயமா

நுனிப்புல்லு மேஞ்சிடத்தான்

மறுக்கிறியே நியாயமா

கிட்டிப்புள்ளு ஆடிடத்தான்

நெனைக்கிறியே நியாயமா

நியாயமா அடி நியாயமா

நான் பட்டினி கெடக்கணுமா

நியாயந்தான் அட நியாயந்தான்

இது பத்தினி கட்டளைதான்

சித்திரையே அடி சித்திரையே

என் நித்திர போயிருச்சே

உன் பாடா படுத்தும் பார்வ என்ன

பைத்தியமாக்கிருச்சே

பத்திரமா அட பத்திரமா ஒன்

பக்கத்தில் நிக்கட்டுமா

என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன

இடுப்புல தூக்கட்டுமா

இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி

தூளியும் ஆடட்டுமா

மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே

தூக்கி வீசட்டுமா

நியாயமா இது நியாயமா

பதில் சொல்லடி செல்லம்மா

நியாயந்தான் அது நியாயந்தான்

தாலி கட்டிட வேண்டாமா

- It's already the end -