Kadhaliye - Harish Raghavendra

Kadhaliye

Harish Raghavendra

00:00

04:58

Similar recommendations

Lyric

காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே

எனக்கென ஏன் பிறந்தாய்?

இனிமேல் யார் துணையோ?

இவளே கீர்த்தனையோ?

பட்டாம்பூச்சி குளிக்கும் போது

சாயம் போகுமோ?

கண்ணும் கண்ணும் மோதும் போது

காயம் ஆகுமோ?

கண்ணாடி பொம்மை ஒன்று

கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின்

தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே

எனக்கென ஏன் பிறந்தாய்?

உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன்

ஆயுள் ரேகை இல்லையே

கனவு மட்டும் எனக்கு உண்டு

கண்ணை கானவில்லையே

கடற்கரை மணலெல்லாம்

காதல் ஜோடி கால் தடம்

என்தன் பாதம் எங்கே வைப்பேன்

வந்து சொல்வாய் என்னிடம்

ஒரு வீணையை கைகளில் கொடுத்து

என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்?

ஒரு காதல் நாடகம் நடத்தி

அடி நீ என்னை திரையிட்டு மறைத்தாய்

கண்ணாடி பொம்மை ஒன்று

கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின்

தாகத்தை யார் அறிவார்

தூங்கும் போது கண்கள் ரெண்டும்

போர்வை கேட்க கூடுமோ?

தண்ணீர் மீது பூக்கும் பூக்கள்

காய்ச்சல் வந்து சாகுமோ?

இறந்துப்போன காதல் கவிதை

இறங்கல் கூட்டம் போடுதோ?

எனக்குள் இருக்கும் உன்தன் இதயம்

எகிறி குதித்து ஓடுதோ?

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன்

எனை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய்

ஒரு வாரத்தில் ஏழு நாட்கள்

என் காதல் விடுமுறை நாளோ?

கண்ணாடி பொம்மை ஒன்று

கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின்

தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே

எனக்கென ஏன் பிறந்தாய்?

இனிமேல் யார் துணையோ?

இவளே கீர்த்தனையோ?

பட்டாம்பூச்சி குளிக்கும் போது

சாயம் போகுமோ?

கண்ணும் கண்ணும் மோதும் போது

காயம் ஆகுமோ?

- It's already the end -