00:00
04:36
«அம்மா அம்மா» என்பது மலேசிய வசுதேவன் இனி இணைந்துள்ள ஒரு பிரபலமான தமிழ் பாடல் ஆகும். இந்தப் பாடல் [திரைப்படம்/ஆльбомின் பெயர்] இருந்து வருகிறது மற்றும் இதன் நீண்ட தாளங்கள், உணர்ச்சிமிக்க வரிகள், வசுதேவன் அவர்களின் மெல்லிய குரல் இவற்றால் ரசிகர்களிடையே இனிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாடலின் பரபரப்பான இசை மற்றும் தீவிரமான உணர்வுகள், இதனை தமிழ் இசை உலகில் தனித்துவமாக்குகின்றன.
அம்மம்மா
இதயம் எரியும் கொடுமை நடந்ததே
பூ மாலை
கனலில் விழுந்து கருகிப் போனதே
தீயோடு தீயாகித் தீந்தாயே
அம்மம்மா
எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே
எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
♪
சோறூட்டிப் பார்த்திருந்து
சொந்தம் என ஆதரித்த
தாயவளும் தீ கொண்டாள்
என்ன சதியோ
தாலாட்ட தாயும் இன்றி
சொல்லி அழ யாரும் இன்றி
ஏங்கி அழுதே இங்கே
ஏழைக் கிளியே
ஒளியே மறைந்தே கிடக்க
உலகே இருளில் தவிக்க
அடிமை உயிர் தான் மலிவா
விடிவே எமக்கு இல்லையா
விழியில் தெரியும் விடிவே
அது தினமும் எழுதும் முடிவே
இங்கு வெடித்திடும் நெருப்பினில்
கொடுமைகள் எரிந்திடுமே
எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
♪
ஆண்டாண்டு காலம் இங்கு
அடிமை என வாழ்ந்ததெல்லாம்
நாளை முதலே இங்கே மாறி விடலாம்
வாதாடிப் பார்த்ததெல்லாம்
வீணாகப் போனதென்ன
வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம்
துணிவே துணையாய் இனி வா
புலியாய் எழுவாய் மனிதா
தடையே தகரும் இனியே
தருமம் ஜெயிக்கும் நிஜமே
கொடுமைச் சிறையும் உடைக்க
ஒரு சபதம் எடுத்து வருவேன்
இனி விடிந்திடும் பொழுதுகள் நமக்கென விடியட்டுமே ஏ
எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே