Vaanmegam - From "Vasantha Mullai" - Rajesh Murugesan

Vaanmegam - From "Vasantha Mullai"

Rajesh Murugesan

00:00

05:45

Similar recommendations

Lyric

வான் மேகம் பொழியும் கார்காலம்

பயணம் நீயும் நானும் போகலாம்

ஆகாயம் நமது கை தூரம்

பறவை போலே நாமும் மாறலாம்

உன்னோடு வந்தாலே

உலகம் வேறு வண்ணம்

ஊஞ்சலாடும் நெஞ்சம் தானா

கண்ணாலும் சொல்லாலும்

பேசி தீர்த்த பின்னும்

பேசதோன்றும் இன்னும் தானா

கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்

நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்

எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்

கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்

கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்

நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்

எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்

எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே

ஓராயிரம் வானவில்

அசைவின் தாலாட்டிலே தூங்குதே

உலகமே வாசமாகுதே

சந்தோஷ சாரல் வீசுதே

காதலின் சாலையில் நாட்கள் போகுதே

நீ போதும் அருகிலே

மழலை போல் ஆவேன் நொடியிலே

உன் தோளில் சாயும் நேரமே

என் பாரம் யாவும் தீருமே

விடா மழை அதில் குடை

உன் பார்வை போதுமே

கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்

நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்

எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்

கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்

கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்

நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்

எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்

எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே

- It's already the end -